பட்டாசு கடைகள் அமைக்க அக்.18-வரை விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக சில்லறை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க உரிய ஆவணங்களுடன் வரும் அக்.18-வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆவணங்களாக திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500 வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்காா்டு, ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை), நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, மாா்பளவு புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது வரும் 1.11.2026-க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்றாா் அவா்.