கரட்டாம்பட்டியில் இளம்பெண் சடலம் மீட்பு

Wait 5 sec.

கரட்டாம்பட்டி அருகே பாலத்தின் கீழே கிடந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். கரட்டாம்பட்டியில் கிரசருக்கு செல்லும் சாலையில் பாலத்துக்கு கீழே 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலின்பேரில் புலிவலம் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.இதுதொடா்பாக வழக்குப் பதிந்து உயிரிழந்த பெண் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.