புது டில்லி, செப். 24 - திருத்தியமைக்கப்பட்ட ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை இறுதியாக்கும் பணியை தேசிய வளர்ச்சி சபை இன்று ஆரம்பித்தது. மாநில முதலமைச்சர்களும், கவர்னர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.நிதி வசதிகளை அதிகமாக திரட்டுவதும், அதிக அளவில் முதலீடு செய்வதும், பொது நிதிகளை பராமரிப்பதில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதும் அவசியம் என்று பிரதமர் இந்திரா காந்தியும் திட்டக் கமிஷன் உதவித் தலைவர் பி.என். ஹத்ஸரும் பேசுகையில் வற்புறுத்தினார்கள்.திருத்தப்பட்ட திட்டம் ரூ. 39303 கோடி அரசு துறையில் முதலீடு செய்ய வகை செய்கிறது.ஐந்தாவது திட்ட நகல் மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்ட தொகையைவிட இது சுமார் ரூ. 2000 கோடி அதிகம் ஆகும். திருத்தப்பட்ட ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் பற்றிய தங்களது கருத்துக்களை முதலமைச்சர்களும், கவர்னர்களும் எடுத்துரைத்தார்கள். ...... ஏற்றத் தாழ்வுகள்சமூக, பொருளாதார, பிராந்திய எல்லா வகை ஏற்ற தாழ்வுகளையும் தணிப்பது நமது அபிவிருத்தித் திட்டமிடலின் மைய லட்சியங்களில் ஒன்றாக எப்பொழுதும் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.ஏழைகள் பிரச்னைகளை காலக் கிரமத்தில் தீர்ப்பது நமது திட்டம் செல்லும் திசையாக இருக்கும் என்று அவர் சொன்னார்.திட்டம் பல பணிகளின் அட்டவணை அல்ல, நுட்பமான புள்ளி விவரங்களின் தொகுப்பும் அல்ல. அது ஒரு மக்களின் முன்னேற்ற சாசனமாகும் என்றார் அவர். ...சர்க்காரியா கமிஷன் விசாரணை - பணம் போய் சேர்வது பற்றிய நீதிபதி கேள்விக்கு சாட்சி பதில்சென்னை, செப். 24 - விமான மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் வேலையை ஒப்படைப்பதற்காகவும், கிடப்பில் இருந்த பில்களுக்கான பணத்தை பழைய பட்டுவாடா செய்ததற்காகவும் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திற்கு ரூ. 4 இலட்சத்து 31 ஆயிரத்து 221ம், வைத்தியலிங்கம் மூலமாக முதல் அமைச்சருக்கு ரூ ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 273-ம் கொடுக்கப்பட்டதாக ஏவிந்தியா விமானக் கம்பெனியின் நிர்வாக டைரக்டர் ஆர். ஹெச். கேப்டன் நேற்றுக் கூறியதைச் சர்க்காரியா கமிஷன் முன் இன்று தொடர்ந்து சாட்சியம் அளித்த கே.என்.ஏ. கிருஷ்ணன் உறுதி செய்தார். நீதிபதி சர்க்காரியா முன், நேற்றுப் பிற்பகல் சாட்சியம் அளிக்கத் தொடங்கிய 'அக்ரிகல்சுரல் ஏவியேஷன்" டைரக்டர் கே.என்.ஏ. கிருஷ்ணன் தொடர்ந்து சாட்சியம் அளித்தார்.4 பெட்டிகள் இழப்புஅன்பில் தர்மலிங்கத்திற்குத் தர வேண்டியிருந்த ரூ. 8.82 லட்சத்தில் ஒரு பகுதியாகவே மேற்கண்ட தொகைகளைத் தந்ததாக சாட்சி கிருஷ்னன் கூறினார். தரப்படாமல் பாக்கியாக நின்ற தொகை ரூ. 3 இலட்சத்து 33 ஆயிரத்து 866 ஆகும். ஒவ்வொரு முறையும் பணத்தைக் கவரில் வைத்து கைப்பெட்டிகளில் அவற்றைப் பத்திரப்படுத்தி கைமாறச் செய்த போது இழந்து போன பெட்டிகளே நான்காகும் என்றும் சாட்சி கிருஷ்ணன் சொன்னார். ...25.9.1976: Fifth Plan – Prime Minister holds consultations on mobilizing financial resources.24.9.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை - பில் பணம் பெற விமான கம்பெனிகள் முயற்சி, அதிர்ச்சி சாட்சியம்