அரூரில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிகள் தொடக்கம்

Wait 5 sec.

அரூர்: தமிழக அரசின் 'பனை விதைகள் நடும்' திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் அரூரில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை பாதுகாக்கவும், நீா்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், நிலத்தடி நீா் மட்டத்தை மேம்படுத்தவும் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியினை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைந்து, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் அரூர் அருகே செல்லம்பட்டி ஊராட்சி காவாப்பட்டி பெரிய ஏரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி.செம்மலை தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.இதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஏரிக்கரை, வரப்பு மற்றும் புறம்போக்கு நிலங்களில் பனை விதைகளை நட்டனர்.பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே.கோபிநாத், டி.அருண்குமார், தனியார் பள்ளி, கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், விவசாய சங்கத்தினர். மழைக்காலத்தை பயன்படுத்தி ஏரி, குளம், கண்மாய் கரைகள், ஆற்றங்கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் பனை விதைகள் நடப்படுகின்றன.பனை மரம் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் அரணாக விளங்குகிறது. நுங்கு, பதநீர், கருப்பட்டி, ஓலை, நார் என அதன் அனைத்து பாகங்களும் பொருளாதார பயன் தருகிறது. மேலும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய இம்மரம் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க உதவுகிறது.இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே.கோபிநாத், டி.அருண்குமார், தனியார் பள்ளி, கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். Work on planting ten million palm seeds begins in Harurஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சா் ஆனந்த் தொடங்கி வைத்தாா்