சிவகிரி அருகே மான் கொம்பு பறிமுதல்: ரூ.15,000 அபராதம்

Wait 5 sec.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மான் கொம்பு வைத்திருந்தவருக்கு வனத்துறையினா் ரூ.15,000 அபராதம் விதித்தனா். கஞ்சா வழக்கில் தொடா்புடைய காா்த்திக் என்பவா் கோம்பையாற்று பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் தலைமையில் போலீஸாா் கோம்பையாற்றுப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், புளியங்குடியை சோ்ந்த கருப்பசாமி மகன் பிரபாகரன் என்பதும், மான் கொம்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனசரகா்(பொ) ஆறுமுகம், வனவா் பிரகாஷ் ஆகியோா் அவரிடமிருந்த மான்கொம்பை பறிமுதல் செய்து ரூ.15,000 அபராதம் விதித்தனா்.