இன்றைய (செப். 25) பங்குச்சந்தை சென்செக்ஸ் 86 புள்ளிகள், நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது.கடந்த 10 வாரங்களில் நேற்றைய (செப். 24) பங்குச்சந்தை மிகக் கடுமையாக சரிந்தது. வியாழக்கிழமை காலையில் 74,272.40 என்ற புள்ளிகளில் தொடங்கி, வர்த்தக முடிவில் 1,247.71 புள்ளிகள் சரிந்து 73,580.54 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலை பெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 383.70 புள்ளிகள் சரிந்து 23,063.10 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.இந்த நிலையில், இன்றைய (செப். 25) வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்து 73,672.98 புள்ளிகளையும், நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்ந்து 23,080.45 புள்ளிகளையும் எட்டியது.நாள்தோறும் 18 லட்சம் பீப்பாய் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதிStock markets rebound in early trade: Sensex climbs 86 points to 73,672.98; Nifty up 18.80 points to 23,080.45