சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 25) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 120, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 680, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 25, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 1,12,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,010 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 250 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Today gold and silver rate in chennai and tamilnadu