சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ. 197 கோடி செலவழித்த திமுக!

Wait 5 sec.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்காக செலவழித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளனர்.தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 16-ல் அறிவிக்கப்பட்டது.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடியும்வரையில் அரசியல் கட்சிகள் செலவழித்த கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் ஒப்ப்டைக்க வேண்டும்.இதன்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக செலவழித்த கணக்குகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.திமுக பிரமாண பத்திரத்தின்படி, தேர்தலுக்கு முன்பாக திமுகவிடம் கையிருப்பாக ரூ. 365 கோடியும், தேர்தல் நேரத்தில் நன்கொடைகளாக ரூ. 126 கோடியும் வசூலாகியுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிரசாரத்துக்கு ரூ. 2.66 கோடியும், மநீம தலைவர் கமலஹாசன் பிரசாரத்துக்கு ரூ. 3.24 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் விளம்பரங்களுக்காக ரூ. 70 கோடி என தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் ரூ. 149.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், தங்களின் வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் என ரூ. 47.9 கோடி செலவிட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மொத்தமாக ரூ. 197.8 கோடி செலவிட்டு, தேர்தலின் நிறைவில் கையிருப்பாக ரூ. 319 கோடி வைத்துள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.அதேபோல, அதிமுகவிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மொத்தமாக ரூ. 112.3 கோடி செலவு செய்துள்ளனர். தமிழக பாஜகவில் ரூ. 51.56 கோடி செலவிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சியில் நட்சத்திரப் பேச்சாளர், பயண செலவு, விளம்பரச் செலவு என மொத்தம் ரூ. 1.37 கோடி செலவிட்டுள்ளனர்.சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவின் செலவு குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.மதுராந்தகத்தில் இன்று முதல்வா் விஜய் பிரசாரம்Expenditure of political parties in the TN assembly elections