மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,398 கன அடியாக செவ்வாய்க்கிழமை மாலை குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,867 கன அடியிலிருந்து வினாடிக்கு 3398 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84.16 அடியிலிருந்து 83.92 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 45.97 டிஎம்சியாக உள்ளது.Water inflow to Mettur Dam has decreased!