பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?

Wait 5 sec.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அரசு வெளியிட்ட அரசாணையை முதல்வர் ஜோசப் விஜய் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து ஏற்கெனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து வரும் தமிழக அரசு, அது தொடர்பாக வெளியிட்ட அரசாணையையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில், புதிய தலைமைச் செயலகம் ரூ.1200 கோடியில் 25.55 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என பேரவையில், முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலம் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 8ஆம் தேதி தமிழக அரசு அரசாணையையும் வெளியிட்டிருந்தது.ஆனால், தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம், மீனவர்கள் படகுகளை நிறுத்துமிடம், வலைகளை உலர்த்தும் இடம் என்பதால், தங்களது வாழ்வாதாரமே பறிபோகும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், இயற்கை சீற்றங்களால் அபாயம் ஏற்படும் பகுதி, ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் என்பதால் மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்த எதிர்ப்புகள் குறித்து பதிலளித்த பொதுப் பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் விஜய் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று பதிலளித்திருந்ததும் பேசுபொருளானது. முதல்வர் இறுதி முடிவு செய்யாமலேயே அரசாணை வெளியிடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்தது.தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் போராட்டங்களுக்கு இடையே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யவும், புதிய இடத்தை தேர்வு செய்து அந்த விவரத்துடன் புதிய அரசாணை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.லண்டனில் இருந்து திரும்பிய தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்தும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை கோயிலுக்கு அருகே ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டதாக தவலறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகின.ஆனால், தற்போது, சில ஊடகங்களில், சென்னையின் முக்கிய இடமான பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதெல்லாமுமே தகவல்கள்தானே தவிர, எந்தத் தகவலும் உறுதி செய்யப்படவில்லை.பட்டினப்பாக்கத்துக்கு எதிர்ப்பு ஏன்?புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தமிழ்நாட்டின் நிதிநிலையை ஓரளவு சரி செய்த பிறகு தலைமைச் செயலகம் கட்டலாமே என்பதுதான் ஒரு சாரார் கருத்து.மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்பட்சத்தில் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்தப் பகுதியில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், பள்ளிக் கூடங்கள், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. ஏற்கனவே, கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில், இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும்.சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பெரும் பிரச்னையை சந்திக்கும் நிலை ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.