செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்!

Wait 5 sec.

மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளங்கை அளவுள்ள மியூஸ் சார்ம் ஏஐ சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது கிட்டத்தட்ட செல்போனுக்கு மாற்றாக வந்திருப்பதாகவே கருதப்படுகிறது.மெட்டா கனெக்ட் நிகழ்வில், மார்க் ஜுக்கர்பெர்க் 'மியூஸ் சார்ம்' என்ற சிறிய சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.இதுவரை கையில் செல்போனை வைத்துக் கொண்டு அதில் செய்யறிவின் உதவியோடு நாம் செய்து வந்த வேலைகளை இனி இந்த மியூஸ் செய்யுமாம்.இது பல வடிவங்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது கையில் வைத்திருப்பவர்களைப் பார்த்து அசையும், நம்மைப் பார்த்து கையசைக்கும், விலங்கு, விண்வெளி வீரர் என அழகழகான அவதாரங்களைக் கொண்ட, தனிப்பயனாக்கக்கூடிய ஓஎல்இடி திரையுடன் வருகிறது. மெட்டாவின் மியூஸ் ஏஐ (Muse AI) மூலம் குரல்வழி உரையாடல்களையும் இந்த மியூஸ் மேற்கொள்ளும். விடியோ பார்க்கலாம், பயணங்களை முன்பதிவு செய்ய உதவும். மின்னஞ்சல் அனுப்பும் பணிகளைக் கையாளும்.இதில் 5ஜி இணையம், கேமரா மற்றும் கைரேகை சென்சார் ஆகியவை உள்ளன. விடுமுறைக்காலத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் இந்த மியூஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொலைபேசிகள் அல்லது டேப் போன்றவற்றுக்கு மாற்றாக வந்திருக்கின்றன. ஒரு வேடிக்கையான, எப்போதும் தயாராக இருக்கும் தோழனாக கையில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கீ செயின் போல மாட்டிக் கொள்ளலாம்.மேலும், மெட்டாவின் ஆய்வகத்திலிருந்து வரும் புதிய விளையாட்டுத்தனமான சாதனங்களில், செய்யறிவையும் பயன்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த மியூஸ் நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.Muse, your personal agent, now has voice and real-time video. You can have long conversations and Muse will work in the background and get things done for you as you're talking. We're also bringing Muse to glasses so you can talk hands-free throughout the day. pic.twitter.com/0sfSXrYyvl— Mark Zuckerberg (@finkd) September 24, 2026 இது பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருப்பதாவது, உங்கள் தனிப்பட்ட உதவியாளரான 'மியூஸ்' (Muse) இப்போது குரல் மற்றும் நிகழ்நேர (real-time) வீடியோ வசதிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட நேரம் உரையாடலாம்; அதே வேளையில், மியூஸ் பின்னணியில் இயங்கி உங்களுக்கான பணிகளைச் செய்து முடிக்கும். நாள் முழுவதும் கைகளைப் பயன்படுத்தாமலேயே (hands-free) உரையாடும் வகையில், மியூஸை 'ஸ்மார்ட் கண்ணாடிகளிலும்' (smart glasses) நாங்கள் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.