ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லீஸ் (32 வயது) ஃபீல்டிங்கின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்தது. இருப்பினும் அடுத்த ஓவரிலேயே பந்துவீசி விக்கெட் எடுத்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 19 ஓவர்களில் தெ.ஆ. அணி 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 6.5ஆவது பந்தில் டெம்பா பவுமா அடித்த பந்தை நாதன் எல்லீஸ் ஃபீல்டிங்கில் ஓடிச்சென்று தடுத்தார். அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனைப் பொருட்படுத்தாமல் அடுத்த ஓவரை வீசிய நாதன் எல்லீஸ் முதல் பந்திலேயே (7.1) குயின்டன் டிகாக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த விடா முயற்சி குணமும் அர்ப்பணிப்பும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. ஒருநாள் போட்டிகளில் 2026 ஆண்டில் மட்டுமே நாதன் எல்லீஸ் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக சிஎஸ்கேவில் விளையாடிய ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தனது முழங்காலில் ரத்தம் வடிந்தும் பேட்டிங் செய்தது கவனம் பெற்றது. இதேபோல் 2011 ஒருநாள் உலகக் கோப்பையிலும் பிரட் லீ ரத்த காயத்துடன் விளையாடியது குறிப்பிடத்தக்கதுஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது!Bleeding knee while fielding..! Nathan Ellis took a wicket on the very next ball!