ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் மகளிருக்கான பிரிவில் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் காலிறுதியில் மோதவிருக்கிறார்கள். இதனால், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 1 தங்கம் உள்பட மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது.மகளிர் ஸ்குவாஷ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், சிங்கப்பூரின் அவு யோங் வை லினனை 11–4, 11–5, 11–7 என 3-0 என்ற கேம்களில் வென்றார். மற்றுமொரு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் தன்வி கண்ணா சிங்கப்பூரின் ஆவ் யோங் வாய் யான்னை 5-11, 11-4, 11-5, 13-11 என 3-1 என்ற கேம்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். சிங்கப்பூர் சகோதரிகளை வென்ற இந்திய வீராங்கனைகள் அனாஹத் சிங் - தன்வி கண்ணா காலிறுதியில் மோதவிருக்கிறார்கள். இதனால், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. 18 வயதான அனாஹத் சிங், 30 வயதான தன்வி கண்னாவும் தேசிய அளவில் பலமுறை நேருக்கு நேர் விளையாடி இருக்கிறார்கள். கடைசியாக ஜேஎஸ்டபிள்யூ இந்தியன் ஓபனில் அனாஹத் சிங் 3-1 என தன்வியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. Anahat Singh and Tanvi Khanna set up all-India quarters to guarantee a medal at Asian Games 2026