அந்தரங்க விடியோ கசிந்த போது... மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த ராதிகா ஆப்தே!

Wait 5 sec.

நடிகை ராதிகா ஆப்தே தன் அந்தரங்க விடியோ கசிந்ததால் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். நடிகை ராதிகா ஆப்தே தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர். 41 வயதான இவர் முன்னணி நாயகியாக மட்டுமல்லாமல் கதையம்சமுள்ள திரைப்படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அண்மையில், இவர் நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடரும் வெளியானது. இதிலும், சர்ச்சையான கதையில் நடித்திருந்தார்.இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே, “என்னுடைய அந்தரங்க விடியோ இணையத்தில் கசிந்த போது அதனை கையாள மிகவும் சிக்கலாக இருந்தது. இப்போதும் நினைவு இருக்கிறது; என் ஆடை வடிவமைப்பாளரின் கார் ஓட்டுநர் அந்த விடியோவை பார்த்துவிட்டு அவரிடம், “ராதிகா வீட்டுக்கு போவீர்களா?” எனக் கேட்டாராம். மேலும், என் வீட்டுப் பாதுகாவலர் வரை அந்த விடியோ பார்க்கப்பட்டது. இதனால், 3 நாள்களுக்கும் மேலாக நான் வீட்டைவிட்டு வெளியேறாமல் என் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை பாதுகாப்பிற்காக இருக்கச் சொன்னேன். அந்த நிகழ்வு எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, “ஒரு திரைப்படத்தில் நடித்த போது, சண்டைக் காட்சிகளில் உள்ளாடை மட்டும் அணிந்து நடிக்க முடியுமா என்று கேட்டனர். இதனால் நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? என நினைத்துக்கொண்டு முடியாது என உறுதியுடன் மறுத்துவிட்டேன்” என ராதிகா ஆப்தே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக பார்வைகளைப் பெற்ற சல்மான் கானின் பிக்பாஸ் விடியோ! Actress Radhika Apte has spoken about her experiences following the leak of a private video of hers.