ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது.தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது.டெம்பா பவுமா, டேவிட் மில்லர் சதம் விளாசல்!முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது.தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அய்டன் மார்க்ரம் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். குயிண்டன் டி காக் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜோஷ் ஹேசில்வுட். அதன் பின், கேப்டன் டெம்பா பவுமா மற்றும் மேத்யூ ப்ரீட்ஸ்க் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடிய போதிலும், மேத்யூ ப்ரீட்ஸ்க் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.இதனையடுத்து, கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கேப்டன் டெம்பா பவுமா சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடிக்க, அதிரடியில் மிரட்டினார் டேவிட் மில்லர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். கேப்டன் டெம்பா பவுமா 116 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியில் மிரட்டிய மில்லர் 93 பந்துகளில் 142 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். டுயன் யான்சென் 27* ரன்கள், மார்கோ யான்சென் 19 ரன்கள் எடுத்தனர்.ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.366 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.Batting first in the second ODI against Australia, the South African team scored 365 runs for the loss of 9 wickets.ஆபத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள்; முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!