புதுச்சேரியில் ஒரு வாலி அரிய வகை சீரா மீன் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலத்தில் விற்பனையானதால் ஏனாம் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றில் பருவ மழையால் சீரா மீன்கள் அதிகமாக கிடைத்துள்ளது. பழமையான நாள்களில் சீரா மீன்களை மீனவ பெண்மணிகள் சேலையில் பிடிப்பது வழக்கம். இந்த மீன்கள் அறுசுவை உடையது. உடலுக்கும் நன்மை சேர்க்கும். இந்த மீன்கள் ஆந்திரம், தெலங்கானா பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன.தற்போது வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால், இந்த சீரா மீன்களின் வருகை ஆந்திரம் மற்றும் தெலங்கானா பகுதியான கோதாவரி ஆற்றுப் பகுதியில் அதிகமாக கிடைத்ததுள்ளன.சீரா மீன்கள் அளவையில் லிட்டரில் விற்கப்படுகின்றன. தற்போது அதிக அளவில் சீரா மீன்கள் கிடைத்ததால் ஒரு வாளி சீரா மீன்கள் ரூ. 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. சீரா மீன்கள் நல்ல விலையில் விற்பனை செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!puducherry fish market Rare fish auctioned for Rs. 26,000