சாலை ஆய்வை விடியோ எடுத்த நபரை கன்னத்தில் அறைந்த பொதுப்பணித்துறை அமைச்சர்!

Wait 5 sec.

தில்லி நகர்ப்பகுதியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்கையில் அதனை விடியோ எடுத்த நபரை தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கன்னத்தில் அறைந்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங் சாலையின் மேற்பரப்பை கையால் பெயர்த்தெடுத்து அதன் உறுதித்தன்மை பற்றி கேள்வி எழுப்பினார்.அப்போது அருகில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் இந்த நிகழ்வுகளை விடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரை அமைச்சர் திடீரென அறைந்தார்.இளைஞரை அமைச்சர் அறையும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி விமர்சிக்கப்பட்டு வருகின்றது.அந்த விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால், உள்ளூர் மக்கள் சாலையின் கட்டுமானம் பற்றி கேள்வி எழுப்பியபோது வர்மா தனது நிதானத்தை இழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்தப் பகுதிக்கு தானும் சென்று ஆய்வு நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல, தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி பேசுகையில், “மோசமான தரத்தில் அமைக்கப்பட்ட சாலைக்கு பொதுமக்களின் பணத்தை செலவிட்ட அமைச்சர் கைது செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.அமைச்சரைப் போல இல்லாமல் ரவுடியைப் போல அவர் நடந்து கொள்வதாகக் கூறிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் பர்வேஷ் வர்மா, ஆம் ஆத்மி கட்சியினர் அங்குள்ள சூழலை விளக்காமல் விடியோவை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டினார்.”முதலில் சாலை கட்டுமானம் பற்றி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்குச் சென்று வருமாறு என்னிடம் கூறினார். ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்களை அங்கு வரவழைத்து அவதூறாகப் பேச வைத்தார். அதனால், ஒரு சாதாரண மனிதர் செயல்படுவதைப் போன்று நான் செயல்பட நேர்ந்தது.சாலை கட்டுமானம் பற்றிய தணிக்கை சோதனைகளை தில்லி அரசு மேற்கொள்ளும். ஆனால், அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து கமிஷன் கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.यह भारत की राजधानी दिल्ली की भाजपा सरकार के pwd मिनिस्टर हैं सड़क का निरीक्षण करने आए थे पर घोटाले ही घोटाले उजागर होते देखकर आपा खो बैठे और वीडियो रिकॉर्ड करने वाले मेरे साथी को के साथ गुंडागर्दी कर बैठे..@ArvindKejriwal @narendramodi @AamAadmiParty @gupta_rekha @p_sahibsingh… pic.twitter.com/VR5iVQLtQH— Jarnail Singh (@JarnailSinghAAP) September 27, 2026 புதிய ட்ராய் விதிகளின் கீழ் 30 நாள் ரீசார்ஜ், குரல் அழைப்பு திட்டங்கள் வழங்கப்படும்: ராகவ் சத்தா எம்பிPublic Works Minister slaps person filming road inspection