பொதுத்தேர்வுக்கான பெயர் பதிவையொட்டி பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரைப் பதிவேற்ற வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு வருகிற 2027 மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் மதிப்பெண் சான்றிதழில் பெயர்களை சரியாக பதிவேற்றம் செய்யும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொதுத்தேர்வையொட்டி மாணவர்கள் பெயர்கள், அவர்களது பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று பதிவேற்றம் செய்ய வேண்டும். பெயருக்கும், இனிஷியலுக்கும் இடையே புள்ளி கூடாது. விவரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரே பொறுப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Students names must be registered as they appear on their birth certificates