புதுதில்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிற தலைவர்கள் மீதான 2020-ஆம் ஆண்டு கலவர வழக்கு, மத நல்லிணக்கம், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 23) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:* மத நல்லிணக்கம், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.* ஒடிசா மாநிலக் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) நியமனத்துக்கு எதிரான வழக்கு. * பாலியல் வன்புணர்வு முயற்சி மற்றும் பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான வரையறைகளைச் சுருக்கும் வகையில் பாட்னா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது.* 9-ஆம் வகுப்புக்கு மும்மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ-ன் உத்தரவை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளவுள்ளது.* பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிற தலைவர்கள் மீதான 2020-ஆம் ஆண்டு கலவர வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சண்டிகர் நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் * பெண் காவலர்களின் பணியிடங்களில் அடிப்படை மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவதற்கான உரிமையைப் பாதுகாக்கும் பொதுநல மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.என்எஸ்இ ஊழியர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் என்எஸ்இ தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீது புதன்கிழமை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.Important matters listed before Supreme Court on Wednesdayஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் ஆபீசர், அசிஸ்டென்ட் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?