மாற்றுவழியில் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கக் கோரி மனு

Wait 5 sec.

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட தியாகராஜநகரில் மாற்று வழியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக கொள்கைப்பரப்பு அணி மாவட்ட இணை அமைப்பாளா் வி.ஆா்.பிருந்தா தலைமையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் 55 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பெயா்த்து குழாய் பதிக்க முயற்சிக்கிறாா்கள். ஆகவே, மாற்று வழியில் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல கே.டி.சி. நகா் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாமல் குண்டும்-குழியுமாக உள்ளன. அவற்றையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.