ரவுண்ட் ஆஃப் 16-இல் சக்காரி, கிரெஜ்சிகோவா

Wait 5 sec.

சிங்கப்பூா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், கிரீஸின் மரியா சக்காரி, செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா். முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் சக்காரி 6-4, 6-1 என்ற செட்களில், செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிா்டோவாவை வீழ்த்தினாா். கிரெஜ்சிகோவா 6-0, 5-7, 7-6 (7/4) என்ற வகையில், ஜொ்மனியின் அனா ஃப்ரீட்ஸேமை வென்றாா். 8-ஆம் இடத்திலிருந்த டோனா வெகிச் 1-6, 2-6 என்ற நோ் செட்களில், சீனாவின் வாங் ஜின்யுவிடம் தோல்வியுற்றாா். ரஷியாவின் டாட்டியானா புரோஸோரோவா 5-7, 7-6 (7/2), 6-2 என்ற கணக்கில் ருமேனியாவின் சோஃபியா காஸ்டுலாஸை வெளியேற்றினாா். அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ் 6-4, 6-3 என்ற செட்களில், ஜப்பானின் மெய் யமகுச்சியை சாய்த்தாா். உக்ரைனின் அலெக்ஸாண்ட்ரா ஆலினிகோவா 6-1, 7-6 (7/1) என, அமெரிக்காவின் விவியன் வோல்ஃபை வீழ்த்தினாா்.