ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக துணைப் பதிவாளா் பெருவழுதி, கல்லூரி முதல்வா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் கல்லூரியில் பயிலும் சுமாா் 60 மாணவா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா். பின்னா், அவா்களுக்கு குளிா்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், இயக்குநா் திருநாவுக்கரசு, டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, பாலாஜி கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரபு, கலைக்கல்லூரி துணை முதல்வா் நந்தகுமாா், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் நடராஜன், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.