கையடக்க சிறிய, மிகவும் வசதியான வாக்யூம் க்ளீனர்கள் பல வகைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. மிகக் குறைந்த விலையில் கிடைப்பதும் மகிழ்ச்சியான தகவலாக உள்ளது.மிகப்பெரிய வாக்யூம் க்ளீனர்களை, ஒவ்வொரு அறையாக இழுத்துச் சென்று சுத்தம் செய்துகொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.வாக்யூம் க்ளீனர்களை பொருத்தி வீட்டை சுத்தம் செய்வதற்குள் துடைப்பத்தை எடுத்துப் பெருக்கி துடைத்துவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு அமைந்திருந்தது.அன்றாடப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, தூசுகளை உறிஞ்சும் திறன் என்பது ஒன்று மட்டுமே வேக்யூம் க்ளீனரின் சிறப்பாக இருந்தது. ஆனால், குப்பையை வெளியேற்றவோ அல்லது சுத்தம் செய்யவோ சிரமமாக இருக்கும் ஒரு வேக்யூம் கிளீனர் விரைவில் பயன்பாட்டிலிருந்து மறையத் தொடங்கியது.ஆனால், தற்போது வெறும் நான்கு ஆயிரத்துக்குள், கையடக்க வாக்யூம் க்ளீனர்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை வைத்து வீட்டை பெருக்க முடியாவிட்டாலும், அடிக்கடி அலமாரிகள், மேஜைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் அலர்ஜிகளிலிருந்து எளிதாக தப்பிக்கலாம்.மிகப்பெரிய பெட்டகம் இல்லாத வாக்யூம் க்ளீனர், அடிக்கடி சுத்தம் செய்யும் வடிப்பான்கள், வெளிப்படையாக தெரியும் சுத்தம் செய்யும் பகுதி போன்றவை இவற்றை பயன்படுத்துவதை எளிதாக்குகின்றன.காரின் உள்புறம், தரைப்பகுதி, சோஃபா, செல்லப் பிராணிகள் இருக்கும் இடம், ஜன்னல் போன்ற பகுதிகளில் இருக்கும் தூசுகளை உடனடியாக சுத்தம் செய்ய ஏற்றதாக இவை அமைந்துள்ளன.இதில், காருக்கு என பிரத்யேக வேக்யூம் க்ளீனர், வீட்டை சுத்தம் செய்ய, பல்வேறு விதமான பகுதிகளை சுத்தம் செய்வதற்கான அம்சங்களுடன் கூடியது, வீட்டின் பல்வேறு பகுதிகளை சுத்தம் செய்வதற்கான வாக்யூம் க்ளீனர்கள் என பல்வேறு வகைகளில் இவை விற்பனைக்கு வருகின்றன.இணையதளத்தில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. விலையும் இரண்டாயிரம் முதல் நான்கு ஆயிரத்துக்குள் விற்பனையாகி வருகின்றன. தேவைக்கேற்ப, பயன்பாட்டின் அடிப்படையில் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். The handheld vacuum cleaner is here! A surprise gift for those who clean the house!