இந்திய வரலாற்றில் முதல்முறை... ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிக்கு முன்னேறி அனாஹத் சிங் சாதனை!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் இந்திய வீராங்கனையும் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் அனாஹத் சிங் - தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் சடோமி வடானபே உடன் மோதினார். இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 3-2 ( 9–11, 11–13, 12–10, 11–6, 11–3) என்ற கேம்களில் வென்றார். முதலிரண்டு கேம்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை விடாமல் அடுத்தடுத்த கேம்களில் கம்பேக அளித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையாக அனாஹத் சிங் சாதனை படைத்துள்ளார். காலிறுதிப் போட்டியில் மற்றுமொரு இந்திய வீராங்கனையை அனாஹத் சிங் தோற்கடித்தார். இதுவரை இந்திய அணி 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 27 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. HISTORY MADE! Asian Games 2026 | Squash Women’s Singles – SemifinalAnahat Singh (TOPS Development) (WR-17) defeated Satomi Watanabe (WR-6) of Japan in a thrilling 3–2 victory to book her place in the Final.Game Scores: 9–11, 11–13, 12–10, 11–6, 11–3With this victory,… pic.twitter.com/cBNwNPcqOy— SAI Media (@Media_SAI) September 26, 202644 ஆண்டுகளில் முதல்முறையாக மாரத்தானில் பதக்கம்..! வெள்ளி வென்றார் இந்திய வீரர்! Anahat Singh becomes the first Indian female squash player in history to reach the Women’s Singles final at the Asian Games