நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

Wait 5 sec.

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்டது,தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை தொடர்கிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் மின்வெட்டு ஏற்படுவது குறித்து பலரும் பேசி வருகின்றனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் 3 மாதங்களில் முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக் கொண்டிருக்கையில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் கலந்துகொண்டார். மின்வெட்டின்போது அவரும் மேடையில் இருந்தார். மின்துறை அமைச்சர் கலந்துகொண்ட விழாவிலே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். Power cut at the Madurai Govt Law College convocation ceremony attended by Nirmalkumarஜெம் வீரமணி வழக்கில் பல காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு! 3 மாதங்களில் மின்வெட்டு சரியாகும்! நிர்மல்குமார்