ஆசிய விளையாட்டில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாழ்த்து கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.மகளிர் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஈரான் மகளிரணி உடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 37-34 என்ற புள்ளிகளில் வென்றது. வெறுமனே 4 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்! ஈரானுக்கு எதிராக 37-34 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று, நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தையும் தக்கவைத்த இந்திய மகளிர் கபடி அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். களத்தில் ஆதிக்கம் செலுத்தி, அயராமல் தடுப்பாட்டத்தில் உறுதியுடன் இருந்து, தேவைப்படும்போது கிளட்ச் போல ரெய்டு செய்து அசத்தினார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய மகளிரணி நான்காவது முறையாக தங்கத்தை வென்று, மொத்த நாட்டையும் பெருமைக்கொள்ள செய்திருக்கிறார்கள் என்றார். Gold for Bharat! Heartiest congratulations to the Indian Women’s Kabaddi Team for defending their Asian Games title after a thrilling 37-34 victory over Iran!Dominating the mat with relentless defensive grit and clutch raids when it mattered most, they bring home India’s… pic.twitter.com/sK9KJHtTUp— Smriti Z Irani (@smritiirani) September 26, 2026இந்திய வரலாற்றில் முதல்முறை... ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிக்கு முன்னேறி அனாஹத் சிங் சாதனை!India’s 4th Asian Games gold in the event, making the entire nation proud says Smriti Z Irani