ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் இறுதிக்கு முன்னேறிய தமிழக வீரர்..! வரலாற்றுச் சாதனை படைப்பாரா?

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய - தமிழக ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அரையிறுதியில் பாகிஸ்தான் வீரரை வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த அபய் சிங் இன்று ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பானுடன் மோதினார். இந்தப் போட்டியில் அபய் சிங் 35 நிமிஷங்களில் 3-0 என (11-3, 12-10, 11-6) என நேர் கேம்களில் வென்று அசத்தினார். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.இதுவரை இந்திய ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் யாருமே பதக்கம் வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், ஆடவர் பிரிவில் அபய் சிங் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மகளிர் பிரிவில் முதல்முறையாக அனாஹத் சிங் இறுதிக்கு முன்னேறியுள்ளார். இதில் தங்கம் வெல்பவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.INTO THE FINAL! Asian Games 2026 | Squash Men’s Singles – SemifinalAbhay Singh (TOPS Development) defeated Irfan Muhammad of Pakistan in straight games, winning 3–0.Game Scores: 11–3, 12–10, 11–6Abhay now advances to the Final, where the Gold Medal will also carry a… pic.twitter.com/rLLDQdwb4w— SAI Media (@Media_SAI) September 26, 2026இந்திய வரலாற்றில் முதல்முறை... ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிக்கு முன்னேறி அனாஹத் சிங் சாதனை!Abhay Singh Storms Into Asian Games Squash Final With Victory Over Pakistan’s Muhammad Irfan