நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ படம் 2 நாள்களில் ரூ. 114 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் வியாழக்கிழமை(செப்.24) திரையரங்குகளில் வெளியானது.பான் இந்திய அளவில் வெளியான இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியிருக்கிறார்.கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வெளியான முதல் நாளில் ரூ. 88 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் ரூ. 114 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு இன்று (செப். 26) அறிவித்துள்ளது.முன்னதாக, படத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் குறித்து பதிவிட்ட நடிகர் நானி, தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.It is JADAL ZAMANA & we are witnessing its RAMPAGE #TheParadise collects 114 CRORES+ GROSS WORLDWIDE in 2 days ❤❤Book your tickets now!️ https://t.co/XTkG9ueWdvNatural Star @NameisNani in an @odela_srikanth cinema ❤️An @anirudhofficial musical … pic.twitter.com/NrSKStQgEP— SLV Cinemas (@SLVCinemasOffl) September 26, 2026விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்கிறேன்: நடிகர் நானிThe film ‘The Paradise’, starring actor Nani, has grossed over ₹114 crore in two days.