கேரள ஓணம் பம்பர் லாட்டரி! முதல் பரிசு ரூ.30 கோடி! டிக்கெட் விலை?

Wait 5 sec.

கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் 2026 லாட்டரி டிக்கெட் முற்றிலும் விற்றுத் தீர்ந்து, அதன் குலுக்கல் முடிவுகளுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், விரைவில் குலுக்கல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.பல நாள்கள் காத்திருப்பு ஏறக்குறைய முடிவுக்கு வரவிருக்கிறது. கேரளத்தின் மிகப்பெரிய லாட்டரி பரிசான ரூ.30 கோடியை வெல்லப்போவது யார் என்ற தகவல் இன்று மதியம் நடைபெறும் குலுக்கலில் தீர்மானிக்கப்படவுள்ளது.2026-ஆம் ஆண்டிற்கான ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும், இதன் தொடக்க விழா பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.இந்த ஆண்டு சுமார் 90 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் ரூ.30 கோடி முதல் பரிசு, ஒரு டிக்கெட் விலை ரூ.500. இவ்வாறு டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்திருக்கும் வருவாய் மட்டும் ரூ.450 கோடியாம்.இந்த லாட்டரி டிக்கெட் வாங்கியிருப்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசு விழும். ஒட்டுமொத்தமாக பரிசுத் தொகை மட்டும் ரூ.125.55 கோடியாம். இதில் கமிஷன் தொகை ரு.12.55 கோடியாக இருக்கிறது. கேரள மாநில அரசின் கருவூலத்துக்கு செல்லும் தொகை ரூ.241.20 கோடி. இந்த நடைமுறையில் திரட்டப்பட்ட ஜிஎஸ்டி ரூ.128.52 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தலா ரூ.500 லாட்டரி டிக்கெட்டில் ரூ.268 கேரள அரசுக்கு வந்துவிடுமாம். Kerala Onam Bumper Lottery! First prize: ₹30 crore! Ticket price?