ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டு இந்தியர்கள் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் 18 வயதான அனாஹத் சிங், 30 வயதான தன்வி கண்னாவும் மோதினார்கள். இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-5, 11-3) என்ற கேம்களில் ஆதிக்கம் செலுத்தி வென்றார். ஏற்கெனவே, இவர்கள் கடைசியாக ஜேஎஸ்டபிள்யூ இந்தியன் ஓபனில் மோதிய போது அனாஹத் சிங் 3-1 என தன்வியை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் - ஜப்பானின் ரியூனோசுகே சுகுயே உடன் மோதினார். இந்தப் போட்டியில் அபய் சிங் 3-0 (11-4, 11-3, 11-6) என்ற கேம்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இதன் மூலம் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. ஏற்கெனவே, 19 பதக்கங்கள் வென்றுள்ள இந்திய அணிக்கு கபடியிலும் இரண்டு பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.Asian Games 2026 - Squash | Women's Singles (Quarterfinals)Anahat Singh (TOPS Development Athlete) defeats compatriot Tanvi Khanna to move on to the Semifinals and assures India of a medal!Quarterfinal score: 3-0 (11-2, 11-5, 11-3)Anahat's semis match is scheduled against… pic.twitter.com/OZrjavCmQ3— SAI Media (@Media_SAI) September 25, 2026கபடியில் 2 பதக்கங்கள் உறுதி: அபார வெற்றியுடன் இறுதிக்கு முன்னேறியது ஆடவர் அணி! Anahat and Abhay Singh reach squash semi-finals at Asian Games 2026