கடலூர் மாவட்டம், ம. ஆதனூரில் அமைந்துள்ள திருநாளைப்போவார் (நந்தனார்) திருக்கோயிலில், "நந்தனார் குருபூஜை' அக்டோபர் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிமுதல் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த விழாவில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, நடிகை கெüதமி, சமூகச் செயல்பாட்டாளர் கர்னல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள். சிவ.தாமோதரன் அய்யா திருவாசக விண்ணப்பம் ஏறெடுக்கிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவாருக்கு, இதே நாளில் அவர் பயணம் மேற்கொண்ட சிதம்பரம், திருப்புங்கூர், நந்தன்மேடு (பந்தநல்லூர்), நத்தமேடு, திருமருகல், திருமாகாளம் (திருவாரூர்), சேரன்மகாதேவி, கன்னியாகுமரி (ஆயிரமீஸ்வரர்), திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்), திருஉத்திரகோசமங்கை, கரூர், ஆதனூர் (உளுந்தூர்பேட்டை) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிவாலயங்களிலும், திருத்தலங்களிலும் குருபூஜை நடைபெற உள்ளது.