ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் கபடி அணி தாய்லாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. ஏற்கெனவே, தோல்வியே காணாமல் இந்திய மகளிர் கபடி அணியும் இறுதிப் போட்டியில் முன்னேறியுள்ளதால், இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.இந்தத் தொடரில் ஆடவருக்கான கபடி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும் தாய்லாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி 66-28 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி எதிரணியை ஆட்டமிழக்க செய்வதன் மூலம் 43 புள்ளிகளும் போனஸ் மூலம் 15 புள்ளிகளும் 4 முறை ஆல் அவுட் செய்ததன் மூலமாக 8 புள்ளிகளுமாக மொத்தமாக 66 புள்ளிகள் கிடைத்தன. 1990 முதல் ஆசிய போட்டியில் விளையாடி வரும் இந்திய ஆடவர் கபடி அணி இதுவரை 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.ஆடவருக்கான இறுதிப் போட்டி நாளை (செப்.26) இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதுவரை இந்திய அணி 19 பதக்கங்களை வென்றுள்ளன. கபடியில் இரண்டு பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.Asian Games 2026 | Kabaddi (Men's Team | Semifinals)INTO THE FINAL! Sunil Kumar-led Men's Team join the Women's Kabaddi Team to reach the final of their respective eventsIndia secure a convincing 66-28 (Outs – 43 | Bonus – 15 | All-Out – 8) victory over Thailand in the… pic.twitter.com/BGb1ssOCeH— SAI Media (@Media_SAI) September 25, 2026பீலே, நெய்மர் வரிசையில் ரபீனியா..! பிரேசில் கால்பந்து அணியின் ஜெர்ஸி எண்.10! Indians rule kabaddi: Both men's and women's enter Asian Games finals