சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து ஜி.வி. பிரகாஷ் குமார் பெற்றார்.72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக தில்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் இன்று நடைபெற்று வருகிறது.இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.இதில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை அமரன் படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பெற்றுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு மூன்றாவது தேசிய விருதாகும்.முன்னதாக, சூரரைப் போற்று மற்றும் வாத்தி திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார்.இதேபோல், அமரன் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த படத்தொகுப்பாளர் விருதை ஆர். கலைவாணன் ஆகியோர் பெற்றுள்ளனர். G.V. Prakash Kumar won a National Award!தேசிய விருதைப் பெற்றார் நடிகர் மம்மூட்டி!