ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வூஷூ காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதுவரை இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், ரோஷிபினா தேவி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது. இதில் வூஷூ பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி காலிறுதியில் வென்றுள்ளார். வூஷூ பிரிவில் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற ரோஷிபினா தேவி (25 வயது) மக்காவு நாட்டைச் சேர்ந்த சு மான் சின்னை 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். முன்னதாக ஆசிய விளையாட்டில் ரோஷிபினா தேவி வெள்ளி (2023) மற்றும் வெண்கல (2018) பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். மற்றுமொரு இந்திய வீராங்கனை ஹன்ஜாபம் லாங்லென்டோம்பி தேவி ஒன்பதாவது இடம்பிடித்து வெளியேறினார். MEDAL CONFIRMED FOR ROSHIBINA DEVI!Roshibina Devi storms into the Women’s Sanda -60kg semifinals at the Asian Games 2026, defeating Macau’s Man Sin Chu by WPD! A third consecutive Asian Games medal is now assured for Roshibina! #AsianGames2026 #Cheer4Bharat pic.twitter.com/KSZWgF8Rnz— Doordarshan Sports (@ddsportschannel) September 22, 2026கடைசி சர்வதேச போட்டிக்கான ஜெர்ஸியை அறிமுகப்படுத்திய மெஸ்ஸி..! வைரலாகும் விடியோ!Roshibina Devi enters semifinals in wushu at Asian Games, ensures medal