ஆசிய விளையாட்டு: இறுதிக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக்!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் (31 வயது) வால்ட் (கை ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரேயொரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களின் அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் இறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளார். பிரணதி நாயக் இதுவரை ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை வெண்கலம் வென்றுள்ளார். மொத்தமாக 19 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் பிரணதி நாயக் 7ஆவது இடம் பிடித்து இறுதிக்கு முன்னேறியுள்ளார். முதல் வாய்ப்பில் பிரணதி 13.000 புள்ளிகளும் (டி பிரிவில் 4.4 புள்ளிகளும் இ பிரிவில் 8.600 புள்ளிகளும்) இரண்டாவது வாய்ப்பில் 12.433 புள்ளிகளும் (டி பிரிவில் 4.0 புள்ளிகளும் இ பிரிவில் 8.433 புள்ளிகளும்) பெற்றார். போனஸாக 0.20 புள்ளிகள் கிடைத்ததால், சராசரியாக பிரணதி நாயக் 12. 916 புள்ளிகளைப் பெற்று எழாவது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் பிரிவில் 14. 466 புள்ளிகளுடன் யோ சியோ-ஜியோங் முதலிடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணதி நாயக் இறுதிப் போட்டியில் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.VAULTING INTO THE FINAL!Pranati Nayak (TAGG + NCC athlete) secures her spot in the Women’s Vault Final at #AsianGames2026, finishing 7th in qualification with 12.916! The big leap awaits — 24 Sept | 2:25 PM IST!Let’s cheer for Pranati!#Cheer4Bharat #TeamIndia… pic.twitter.com/bSdVfokgk7— SAI Media (@Media_SAI) September 22, 2026ஆசிய விளையாட்டில் ஹாட்ரிக் பதக்க வாய்ப்பை உறுதிசெய்த ரோஷிபினா தேவி! Pranati Nayak qualifies for vault finals in Asian Games 2026