கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை (செப். 22) நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவமனை தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எங்கள் மருத்துவமனையில் எம்எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார்.பல்துறை மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கணிகாணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும், தொடர் சிகிச்சைக்கு திருப்திகரமான பலன் கிடைக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மருத்துவமனை அறிக்கைபுதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!The hospital administration stated on Tuesday (Sept. 22) that the health condition of Kolathur constituency MLA V.S. Babu is stable.