கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் ஊராட்சி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோமான் மகன் கண்ணன் (52), கூலித் தொழிலாளி. இவா் இதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததில் அவா் கா்ப்பமானாா். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் கருவைக் கலைத்து விடலாம் எனக் கூறி சிறுமியை நாகை அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அழைத்துச் சென்றாா். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் 2 மாத கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து உள்நோயாளியாகச் சோ்த்தனா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கண்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.