கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

Wait 5 sec.

நாச்சியாா்கோவில் அருகேயுள்ள வேலங்குடியில் கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. வேலங்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஹரிஹரபுத்திர சுவாமி கோயிலை பூசாரிகள் வெள்ளிக்கிழமை காலை திறக்க வந்தனா். அப்போது முன்பக்க இரும்பு கதவின் பூட்டு, அம்மன் சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் சிலையில் இருந்த 2 கிராம் தங்கப் பட்டத் தாலி மற்றும் வீரன் சாமிக்கு அணிவித்திருந்த அரை கிலோ எடையுள்ள வெள்ளி மீன் டாலா் கொண்ட சங்கிலி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.