ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.இன்று நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 3 பொசிஷன்ஸ் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.இந்திய வீராங்கனைகளான திலோத்தமா சென், விதர்சா வினோத் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1763 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.இதன்மூலம், இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை, 11 பதக்கங்களைக் வென்றுள்ளது.இதுவரை 2 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 25 பதக்கங்களை வென்று, புள்ளிப்பட்டியலில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. சீனா மொத்தம் 99 தங்கம் உள்பட 162 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.‘போல் வால்ட்’-ல் வெண்கலம்... தமிழகத்தின் பரணிகா இளங்கோவன் வரலாற்றுச் சாதனை!The Indian women's team has won the silver medal at the Asian Games.