தொழிலாளியைக் கொன்று காணாமல் போனதாக மனைவி, மகன் நாடகமாடியது அம்பலம்!

Wait 5 sec.

ஏத்தாப்பூர் அருகே நெய்யமலையில் தொழிலாளியைக் கொலை செய்துவிட்டு மாயமானதாக மகன், மனைவி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே நெய்யமலையில் குடும்பத்தகராறல் ஆத்திரமடைந்து, மனைவி, மகன், மாமனார், மைத்துனன் ஆகியோர் சேர்ந்து தொழிலாளியை அடித்துக்கொலை செய்து வனப்பகுதியில் புதைத்து விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் (44). இவரது மனைவி பழனியம்மாள் (40), மகன் முருகன் (21). கணவன் மனைவிக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால் கணவனிடம் கோபித்துக் கொண்ட பழனியம்மாள், தனது மகன் முருகனையும் அழைத்துக் கொண்டு அதே மலைக் கிராமத்திலுள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன் விவசாயி கோவிந்தராஜ், தனது மாமனார் மாணிக்கத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.இதன் பிறகு வாழப்பாடி மங்கம்மா சாலை பகுதியில் தங்கி, விஜய் என்பவரது விவசாயத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்த கோவிந்தராஜ், கடந்த 15 ஆம் தேதி மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் முருகன் இருவரையும் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இருவரும் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், தனது மனைவி பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த பழனியம்மாள்,  அவரது மகன் முருகன், பழனியம்மாளின் தந்தை மாணிக்கம், தம்பி பெரியசாமி,  ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கோவிந்தராஜை பிடித்து, கை கால்களை கயிற்றால் கட்டிப் போட்டு தாக்கி உள்ளனர்.  உருட்டுக் கட்டையால் தலையில்  தாக்கியதில் கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பதறிப்போன நான்கு பேரும் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் கோவிந்தராஜ் உடலை  எடுத்துச் சென்று அருகிலுள்ள வனப்பகுதியில் குழித் தோண்டி புதைத்துள்ளனர்.சொந்த கிராமத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற கோவிந்தராஜ் மீண்டும் வேலைக்கு வராததால் சந்தேகம் அடைந்த வாழப்பாடி தோட்ட உரிமையாளர் விஜய் கடந்த 23 ஆம் தேதி ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.இதனையடுத்து, கோவிந்தராஜ் மாயமானதாக 'மேன் மிஸ்ஸிங்' வழக்கு பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார், நெய்யமலை கிராமத்தில் இரு தினங்களாக முகாமிட்டு நடத்திய விசாரணையில், விவசாயி கோவிந்தராஜை, அவரது மனைவி, மகன், மாமனார், மைத்துனன் ஆகியோர் கட்டிப்போட்டு தாக்கி, கொலை செய்து உடலை வனப்பகுதியில் புதைத்தது அம்பலமானது.இதனையடுத்து மனைவி பழனியம்மாள்(40), மகன் முருகன்(21), மாமனார் மாணிக்கம் (65), மைத்துனன் பெரியசாமி(39) ஆகிய நான்கு பேரையும் ஏத்தாப்பூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்று ஆத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவை நெய்யமலைக் கிராம வனப்பகுதிக்கு அழைத்து சென்று,  புதைக்கப்பட்டுள்ள தொழிலாளி கோவிந்தராஜ் உடலை தோண்டி எடுத்து, அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை நடத்திட ஏத்தாப்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!It has been exposed that the son and wife of a worker staged a drama, claiming he had gone missing after being murdered at Neyyamalai near Ethapur.