வாடிக்கையாளர் நலன் கருதி நாளை நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத் துறை வங்கிகள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற வங்கிகள் வழக்கம் செயல்படும் என்றும், 4வது சனிக்கிழமை என்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.நாடு முழுவதும் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அவற்றின் ஊழியர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, வாடிக்கையாளர் தேவைக்காக ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட மத்திய நிதித் துறை உத்தரவிட்டது.என்னென்ன கோரிக்கை?பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப். 26, 27 ஆகியவை வார இறுதி (சனி, ஞாயிறு) விடுமுறை நாள்களாகும். இதனால், தொடர்ந்து 5 நாள்கள் வங்கிகள் மூடப்பட்டால் க்களின் அத்தியாவசியத் தேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.இதைக் கருத்தில் கொண்டு, செப். 27-ஆம் தேதி (ஞாயிறு) அனைத்து பொதுத் துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளைத் திறக்க பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியது.இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (செப். 27) அனைத்து வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் வசதியுடன் இணைக்கப்பட்ட கிளைகள் மற்றும் பணப்பெட்டக மையங்கள் (கரன்சி செஸ்ட்கள்) ஆகியவை முழுமையாகச் செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.