சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 2,056 கன அடியாக குறைந்தது.காவிரியிலிருந்து இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,184 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,056 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.07 அடியிலிருந்து 81.47 அடியாக சரிந்தது. இன்று காலை அணையின் மொத்த நீர் இருப்பு 43.43 டி எம் சியாக உள்ளது.