நுங்கம்பாக்கத்தில், இயக்குநரும், நடிகருமான மறைந்த பாக்யராஜ் இல்லம் இருக்கும் சாலையின் பெயரை விரைவில் பாக்யராஜ் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நுங்கம்பாக்கத்தில், இயக்குநர் பாக்யராஜ் இல்லம் இருக்கும் லேக் ஏரியா, 5வது குறுக்கு சாலையின் பெயரை திரைக்கதை மன்னர் இயக்குநர் கே. பாக்யராஜ் சாலை என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இயக்குநர் பாக்யராஜ் இல்லம் இருக்கும் சாலையை நேரில் சென்று ஆய்வு செய்து இது குறித்து பரிந்துரையை அளித்திருந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உரிய அனுமதி கிடைக்கப்பெற்றதும், புதிய பெயர் சாலை அடங்கிய பலகை அவ்விடத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது.