இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்தியா, அமெரிக்கா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவது குறித்து இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துவிட்டன. இறுதிக்கட்டப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும்.இந்த ஒப்பந்தமானது இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இந்தியத் தரப்பிலும் அமெரிக்கத் தரப்பிலும் அனைத்தும் தயாராக உள்ளன. ஆனால், நிர்வாக ரீதியில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் சந்தித்து வரும் சில சவால்களின் காரணமாக இந்த ஒப்பந்தம் தாமதமாகிறது என்று தெரிவித்தார்.முன்னதாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் மிக வேகமாகச் செல்கிறது எனவும் இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெறும் எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.கல்லூரி மாணவிக்கு துன்புறுத்தல்: குற்றஞ்சாட்ட நபரை அடையாளம் கண்டது காவல் துறைA senior US State Department official stated that the trade agreement between India and the US would take the relationship between the two countries to the next level.