சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 26) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் இன்று சற்று குறைந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 25, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 1,12,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,010 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், 22 காரட் தங்கம், இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ரூ. 1,12,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 250 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!The price of ornamental gold in Chennai has decreased by Rs. 80 per sovereign today (Sept. 26).