பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு, அரசு உதவிப் பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ( டங வஅநஅநயஐ டா்ள்ற்ஙஹற்ழ்ண்ஸ்ரீ நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவிப் பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளநிலை (தொழிற்படிப்பு), முதுநிலை, தொழில் நுட்பக் (பாலிடெக்னிக்) உள்ளிட்ட பிற படிப்பு பயிலும் மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2026-27-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு, மாணவ, மாணவிக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள மஙஐந (மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்ஐய்ச்ா்ழ்ம்ஹற்ண்ா்ய் நஹ்ள்ற்ங்ம்) எண் மூலம் ட்ற்ற்ல்ள்://ன்ம்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்விஉதவித்தொகைக்கு என உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை ( ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ா்ய் சா்க்ஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்)அணுகி, ட்ற்ற்ல்ள்://ன்ம்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு வரும் அக்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்..