மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் : போக்சோ வீரமணிக்கு எதிராக வெற்றிமாறன் - அமீர் கூட்டறிக்கை!

Wait 5 sec.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர்கள் வெற்றிமாறன் - அமீர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றம்சாட்டப்படும் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.இந்த வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் அமீர் இணைந்து ஜெம் வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.  இந்த உலகைப்பற்றியே முழுதும் அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.வீரமணியை பாதுகாக்க முயன்ற — அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.மேலும், பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமிகளுக்குத் தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அடையாளமும் கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.இனி வருங்காலங்களில் பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிக்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவதே இது போன்ற குற்றச்செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க வழி வகை செய்யும்.வீரமணியின் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும். மேலும் மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே எங்களுடைய குரல் எப்போதும் ஒலிக்கும்” என தெரிவித்துள்ளனர்.போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்!An Unforgivable, Heinous Crime: Vetrimaaran and Ameer Issue Joint Statement Against POCSO-Accused Veeramani!