முதல்வர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.முதல்வர் விஜய் - த்ரிஷா நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம், கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரூ. 32 கோடி வசூலித்தது.இந்த நிலையில், படம் வெளியாகி 21 ஆண்டுகளானதையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதியில் திருப்பாச்சி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. முன்னதாக விஜய் - த்ரிஷா கூட்டணியில் உருவான கில்லி, கடந்தாண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், மீண்டும் விஜய் - த்ரிஷா கூட்டணியில் உருவான திருப்பாச்சி படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. திருப்பாச்சி படத்தில் விஜய், த்ரிஷாஇதனிடையே, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”வும் அதே நாளொல் (அக். 1) திரையரங்குகளில் வெளியாகிறது.1960-களில் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள பத்தா படத்தின் பாடல்கள், சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.இந்த நிலையில், விஜய்யின் திருப்பாச்சியும், விஜய் சேதுபதியின் பத்தாவும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது.லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் விஜய் கதைநாயகனாக நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், திரையில் மோதிக்கொண்ட இருவரும் தற்போது திரையரங்குகளில் மோதிக் கொள்ளப்போவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.பத்தா படத்தில் விஜய் சேதுபதி அதுமட்டுமின்றி, இவ்விரு படங்களுடன் போட்டியாக அக். 2-ல் சிக்மா படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை முதல்வர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சிக்மாமுட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லாதீர்கள்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை!Movies starring Vijay and Vijay Sethupathi are releasing on the same day