ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசப், அக்‌ஷய் குமார் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராவடி’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ளார்.தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், பட வெளியீடு தள்ளிப்போனது. கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றி காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ளது. Ooru side boys வராங்க இனி Gujilimasthu தான் #Raawadi From 24.12.2026 Worldwide Starring: @basiljoseph25 | @lk_akshaykumar | @JafferJiky | #NobleJames | @meshariqhassan7 @chaleswaran | #AishwaryaSharma@Vikjith @leonbrittodp @jenmartinmusic @barathvikraman… pic.twitter.com/bCSMEohPZ0— Seven Screen Studio (@7screenstudio) September 21, 2026 கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா திரைப்படம்!The teaser of the film Rawadi starring Akshay Kumar has been released