வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாடாளுமன்ற சிறப்புக் குழு: நேபாளம்

Wait 5 sec.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய 15 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற சிறப்புக் குழுவை அந்த நாடு அமைத்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனி மற்றும் பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போட்டிகோஷி நதி, வெள்ள நீரை அடித்துச் சென்று, வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன் நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,450 ஆக உயர்ந்துள்ளது, 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கும் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை உயர்வு, பனிப்பொழிவு மாற்றம், பனிப்பாறைகள் உருகி ஏரிகள் உடைதல் போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்களை ஆய்வு செய்வதற்காகவும் 15 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற சிறப்புக் குழு அமைக்கபப்ட்டுள்ளது.இதுகுறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இந்தக் குழுவுக்கு முதல்கட்டமாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.டீசல் தொழில்துறையின் மீதான கட்டுப்பாட்டை இழந்த ரஷியா: டிரம்ப்Nepal has constituted a 15-member special parliamentary committee to assess the damage caused by floods in the country.